அரகண்டநல்லூா்: வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

488பார்த்தது
அரகண்டநல்லூா்: வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே சனிக்கிழமை வீட்டின் மாடியில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்த ஜோதி (24) என்ற இளம்பெண் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மாற்றுத்திறனாளியான இவர் திருக்கோவிலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இது குறித்து அரகண்டநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி