த. வெ. க. வினர் மீது தாக்குதல்: தி. மு. க. நிர்வாகிகள் 2பேர் கைது

1பார்த்தது
த. வெ. க. வினர் மீது தாக்குதல்: தி. மு. க. நிர்வாகிகள் 2பேர் கைது
விழுப்புரம் அருகே வளவனூர் ராமையன்பாளையம் கிராமத்தில், த.வெ.க. தேர்தல் வெற்றி குறித்து பட்டாசு வெடித்த விவகாரத்தில் தி.மு.க. மற்றும் த.வெ.க. கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 4-ம் தேதி திலீப் மற்றும் பசுபதி ஆகியோர் பட்டாசு வெடித்தபோது, தி.மு.க. கிளைச் செயலாளர் மகன் நாதமணி உள்ளிட்டோர் தட்டிக் கேட்டு தாக்கியதாகவும், பதிலுக்கு திலீப் தரப்பினரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பு புகார்களின் பேரில் வளவனூர் போலீசார் நாதமணி மற்றும் கோபிநாத் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி