விழுப்புரம் கார்த்திகை முதல் நாளில் அய்யப்ப விரதம் தொடக்கம்

1பார்த்தது
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பனுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலையிட்டு விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று விழுப்புரம் பாண்டி ரோட்டில் உள்ள ஐயப்பன் ஆலயம் மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள சபரிகிரிசன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சபரிகிரிசனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. கன்னி சாமி முதல் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குருசாமிகள் மணிகண்டன், பாலு ஆகியோருடன் ஆசி பெற்று துளசி மற்றும் ருத்தராட்ஷம் மாலை அணிந்துக்கொண்டனர். இன்று முதல் 48 நாட்கள் விரதமிருந்து மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலங்களில் இருமுடி கட்டிச் சென்று சாமி தரிசனம் செய்வர்.

தொடர்புடைய செய்தி