மதுரை திருப்பரங்குன்றம் மலையைக் காக்க தமிழக அரசு தவறியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவர்கள் வடிவேல் பழனி, விஜயன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலர் சதாசிவம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவ. தியாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகுமாறன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.