விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகம்தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டினார். சென்னையில் இன்று பேட்டியளித்த கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம், திண்டிவனம், வானூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட சி.வி.சண்முகம் பரிந்துரைத்த அனைவருக்கும் இபிஎஸ் வாய்ப்பு வழங்கினார். ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். சுயநலத்திற்காக, சுயலாபத்திற்காக, அமைச்சர் பதவிக்காக தவெகவுடன் சேர்ந்துள்ளார். தன் மீதான தவறுகளை மறைக்க இபிஎஸ் மீது குற்றம்சாட்டுகிறார் என்றார்.