விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அருகே, காரின் முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவசங்கர் (47), ராணி (34), நிதீஷ் (14) மற்றும் புனிதவள்ளி (24) ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காணை போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.