புதிய மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு அளித்த 52 பேர்மீது வழக்கு

0பார்த்தது
விழுப்புரம் காந்தி சிலை அருகே அதிமுக மாவட்டச் செயலாளராக இரா. பசுபதி நியமிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், கோலியனூர் ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து ஆரவாரத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டதாகக் கூறி, ஒன்றியச் செயலாளர் முருகன் மற்றும் கவுன்சிலர் கோல்டு சேகர் உள்ளிட்ட 52 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி