விழுப்புரத்தில் பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

62பார்த்தது
விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி லதா, 43; இவர், பக்கத்து வீட்டை சேர்ந்த சக்திவேல், 50; என்பவரிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ. 5 லட்சம் பணம் கடனாக வாங்கியுள்ளார். 

தற்போது வரை இந்த பணத்தை லதா திரும்ப தராததால், நேற்று முன்தினம்(நவ.27) இவர் வீட்டிற்கு சக்திவேல், மனைவி அபிராமி ஆகியோர் சென்று திட்டி, தாக்கியுள்ளனர். லதா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் சக்திவேல், அபிராமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you