விழுப்புரத்தில் முன் விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

64பார்த்தது
விழுப்புரம் அடுத்த கொளத்தூரைச் சேர்ந்தவர் தயாநிதி மனைவி பிருந்தாவதி, 44; இவரது மகன் பிரவீன். சாலாமேட்டை சேர்ந்தவர் பூவரசன், 30; கடந்த 24ம் தேதி பிரவீன், பூவரசன் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், பூவரசன் தம்பி வசந்தராஜா, 28; அவரது நண்பர் அஜீத், 22; ஆகியோர் பிரவீன் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது தாய் பிருந்தாவதியை திட்டி, மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், வசந்தராஜா, அஜீத் ஆகிய 2 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி