விழுப்புரம்: ஊர்வலம் நடத்திய 200 அதிமுகவினர் மீது வழக்குபதிவு

71பார்த்தது
விழுப்புரம்: ஊர்வலம் நடத்திய 200 அதிமுகவினர் மீது வழக்குபதிவு
அதிமுக கட்சித் தலைமை உத்தரவை மீறியதால் விழுப்புரம் மாவட்டச் செயலராக இருந்த சி. வி. சண்முகம் மாற்றப்பட்டு, புதிய மாவட்டச் செயலராக இரா. பசுபதி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் வந்த அவருக்குக் கட்சியினர் அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்று வரவேற்பு அளித்தனர். இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், அதிமுக மாவட்டச் செயலர் பசுபதி மற்றும் நகரப் பொருளாளர் வி. சேகர் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி