விழுப்புரத்தில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசுகையில், 1987-ல் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைத்ததுடன், அவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவியும், ஓய்வூதியமும் திமுக அரசுதான் வழங்கியதாகத் தெரிவித்தார். மருத்துவர் ராமதாஸை சமூக நீதிப் போராளியாக மதிக்கும் திமுக அரசு 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் தரமற்ற முறையில் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.