விழுப்புரம்: குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

334பார்த்தது
குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நடைபயணம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று நடைபெற்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார். 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்போம்' என்ற மத்திய அரசின் விழிப்புணர்வு வாசகத்துடன், 1098 என்ற பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு எண்ணை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி கல்லூரி மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி