விழுப்புரம்: பொங்கல் கரும்பு கொள்முதல் செய்ய கலெக்டர் ஆலோசனை

85பார்த்தது
விழுப்புரம்: பொங்கல் கரும்பு கொள்முதல் செய்ய கலெக்டர் ஆலோசனை
பொங்கல் திருநாளை யொட்டி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில் கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் 6,19,756 ரேஷன் கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்போர் உட்பட மொத்தம் 6,20,191 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான முழுநீள கரும்பு வழங்க கொள்முதல் செய்வது பற்றியும், கூட்டுறவு, வேளாண்மை, மாவட்ட வழங்கல் துறை சார்ந்த அலுவலர்களோடு கலந்தாலோசனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி