சன்னரக நெல் குவிண்டால் ₹2, 545-க்கு கொள்முதல் ஆட்சியர் தகவல்

0பார்த்தது
சன்னரக நெல் குவிண்டால் ₹2, 545-க்கு கொள்முதல் ஆட்சியர் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் NCCF மூலம் மொத்தம் 78 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 3,147 விவசாயிகளிடமிருந்து 16,829 மெட்ரிக் டன் நெல், சுமார் ₹42.26 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையாக (A Grade) ₹2,545 மற்றும் பொது ரகத்திற்கு (C Grade) ₹2,500 வழங்கப்படுவதால், விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி