விழுப்புரம்: பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை

471பார்த்தது
விழுப்புரம்: பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை
விழுப்புரம் மாவட்டம் அனிச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா (65). முன்விரோதம் காரணமாக இவர் 20.05.2024 அன்று கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மேலும் கொலை செய்து அவரது கம்மல் மற்றும் மூக்குத்தியைத் திருடிச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஏக. ஜெயந்தன் (46) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு பிரிவுகளின் கீழ் முறையே 7 ஆண்டுகள், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ₹1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி