விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் தலைமையில், காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1300 காவல் பணியாளர்கள் பங்கேற்றனர். தேர்வு நாளை (09. 11. 2025) மாவட்டத்தின் 8 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வில் பங்கேற்கும் காவலர்கள் காலை 6 மணிக்கே மையங்களில் அறிக்கை செய்ய வேண்டும். தேர்வாளர்கள் 9. 30 மணிக்குப் பிறகு அனுமதி இல்லை. செல்போன், ப்ளூடூத், ஸ்மார்ட் வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் கருப்பு பந்து முனை பேனா உடன் வந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.