சென்னையைச் சேர்ந்த மகாலிங்கம் மற்றும் ருக்மணி என்ற தம்பதியினர், விழுப்புரம் ரயில் நிலையத்தில் நகை திருட்டு போனதாகப் போலி புகார் அளித்து இன்சூரன்ஸ் தொகையைப் பெற முயன்றனர். இவர்களிடம் இருந்து 30 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பணமும், 140 கிராம் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இவர்கள் மன்னார்குடியில் நகையின் ஒரு பகுதியை உருக்கிப் பணமாக்கியதும், விஜயவாடாவிலும் இதே குற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.