பழி சுமத்தப்பட்டதால் மனமுடைந்து ஆடியோபதிவுடன் வாலிபர்தற்கொலை

2பார்த்தது
விழுப்புரம் அருகே இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (28), புதுச்சேரியைச் சேர்ந்த தேவநாதனிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். தேவநாதன், விக்னேஷை கோயில் பித்தளைக் குழாய்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விக்னேஷ், இதுகுறித்து ஆடியோ பதிவு செய்து, தேவநாதனின் நிலத்தில் இருந்த மாமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விக்னேஷின் அண்ணன் அருண்பிரசாத் அளித்த புகாரின் பேரில், தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்து வளவனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you