ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

2பார்த்தது
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி பதவிகளை அளிக்கும் அறிவிப்புக்கு மத்தியில், விழுப்புரம் மாவட்டத்தில் 736 உள்ளாட்சி பதவிகளில், குற்றப் பின்னணி கொண்ட மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தேர்வு மற்றும் நிராகரிப்புக்கான காரணங்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடக் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி