விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், 2025-26 கல்வியாண்டின் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து இன்று மூன்றாம் கட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 41 அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுடன் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தோல்வியுற்ற மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளித்து உடனடித்தேர்வில் தேர்ச்சி பெற வைக்கவும், வரும் காலங்களில் 100% தேர்ச்சியை உறுதி செய்யவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.