பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

1பார்த்தது
ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த முதற்கட்ட ஆய்வு இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இந்த ஆய்வை துவக்கி வைத்தார். 143 தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான 300 வாகனங்களில் படிக்கட்டுகள், இருக்கைகள், அவசர கால கதவுகள், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவை அரசு விதிமுறைகளின்படி உள்ளதா என அவர் நேரில் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி