விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையுடன் இணைந்து மக்கள் சேவையில் ஈடுபட ஊர்காவல் படைக்கு 14-02-2026 அன்று ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் (165 செ.மீ உயரம்) மற்றும் பெண்கள் (155 செ.மீ உயரம்) விண்ணப்பிக்கலாம். கடலோர ஊர்காவல் படைக்கு கடல் நீச்சல் அறிவு அவசியம். NCC, விளையாட்டு வீரர்கள், அரசு/தனியார் ஊழியர்களுக்கு முன்னுரிமை. விண்ணப்பங்கள் 06-02-2026 முதல் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெறப்படும். கடைசி நாள் 11-02-2026. நேர்முகம் 14-02-2026 அன்று நடைபெறும். தேர்வுக்கு 10ஆம் வகுப்பு சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அசல்+நகல் கொண்டு வர வேண்டும்.