பொன்முடிக்கு மீண்டும் பதவி திமுகவினர் கொண்டாட்டம்

0பார்த்தது
திமுகவில் இருந்து ஏழு மாதங்களுக்கு முன்பு பெண்கள் குறித்து பேசியதற்காக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி, தற்போது மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, விழுப்புரம் திமுக அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி