விழுப்புரம் மத்திய மாவட்ட தி. மு. க. , சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, 102வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம். எல். ஏ. , தலைமையில் விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அருகேவுள்ள எம். எல். ஏ. , அலுவலகத்திலிருந்து தி. மு. க. , நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று கலைஞர் அறிவாலயம் முன் உள்ள கருணாநிதி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட , ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.