விழுப்புரத்தில் திமுக ஐ.டி. விங் அலுவலகம் திறப்பு

459பார்த்தது
விழுப்புரத்தில் திமுக ஐ.டி. விங் அலுவலகம் திறப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உத்தரவின் பேரில், மாவட்டங்கள் தோறும் திமுக ஐ.டி. விங் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் அண்ணா அறிவகம் என்ற பெயரில் மாவட்ட ஐ.டி. விங் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமை வகிக்க, விழுப்புரம் தொகுதி பொறுப்பாளர் துரை கி. சரவணன் முன்னிலை வகித்தார். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சுரேஷ் செல்வராஜ் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர், விழுப்புரம் மாவட்ட ஐ.டி. விங் குழுவினரின் டிஜிட்டல் பிரசார பணிகளை பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி