விழுப்புரம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம், வானூர் ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கர் மீது ஆதரவற்ற பெண்ணை பலமுறை பாலியல் வன்முறை செய்ததாகக் குற்றம் சாட்டினார். பெண் அளித்த புகாருக்கு ஆறு நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்த அவர், பாஸ்கர் மீது மோசடி, மிரட்டல் வழக்குகள் உள்ளபோதும் திமுக தலைமையும் காவல்துறையும் அவரைக் காப்பாற்றுவதாகக் கூறினார். பெண்ணை மிரட்டி வழக்கு வாபஸ் பெற அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், உடனடியாகக் கைது செய்யாவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் அவர் விமர்சித்தார்.