திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் – விசிக எம்பி

0பார்த்தது
விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் எம்.பி. நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்த விசிக எம்.பி. ரவிக்குமார், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர். படிவங்களை பூர்த்தி செய்வதில் அரசு ஊழியர்கள் அழுத்தத்தில் பணியாற்றுவதாகவும், வருவாய் துறை ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வது நீதியற்றது என்றும் விமர்சித்தார். பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் குற்றச்செயல்கள் குறைந்ததாகவும், தமிழகத்திலும் மதுவிலக்கு சாத்தியம் என்றும் வலியுறுத்திய அவர், 2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு குறித்து உறுதியளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி