குடிபோதையில் கார் ஓட்டி விபத்து – பெண்மணி படுகாயம்

0பார்த்தது
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் மேம்பாலத்தில் குடிபோதையில் வேகமாக வந்த கார், மழைநீர் தேங்கியிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் குடிபோதையில் வந்தவரின் கார் கவிழ்ந்தது. முன்னாள் சென்ற காரில் இருந்த பெண்மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் கார் ஓட்டி வந்த நபரை விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி