தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விழுப்புரம் மாவட்டத்தில் நடத்திய கூட்டு ஆய்வில், 28 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் நுகர்வோருக்கு மொத்தம் ரூ. 38 லட்சத்து 24 ஆயிரத்து 575 அபராதம் விதிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்டோரிடம் சமரசத் தொகையாக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் வசூலிக்கப்பட்டதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என மின்சார வாரியச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.