26-ந் தேதி கருப்பு பட்டை தர்ணா போராட்டம் விவசாயிகள் முடிவு

0பார்த்தது
விழுப்புரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில செயற்குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு டெல்லி போராட்ட ஒப்பந்த சரத்துக்களை நடைமுறைப்படுத்தாததையும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யாததையும் கண்டித்தும், விவசாயிகளை கடனிலிருந்து முழுமையாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் 26-ந் தேதி நடைபெறும் தர்ணா போராட்டத்திற்கு முன் ஒரு வாரம் பிரசார இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி