விழுப்புரம் நகராட்சி திடலில், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், நெற்றியில் பட்டை நாமம் அணிந்து, கையில் திருவோடு மற்றும் விளைபொருட்களை ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜோசப்
விஜய் தேர்தல் வாக்குறுதியின்படி, கூட்டுறவு சங்கங்களில் பெற்ற விவசாயப் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்த
போராட்டம் நடைபெற்றது.