5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, கூட்டுறவு சங்கத்தில் பெற்ற பயிர் கடன் ₹50,000 வரை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்ற தமிழக முதல்வர் விஜய்யின் அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் செயல் என விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.