விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் பரணி என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாவட்ட அலுவலர் பாஸ்கர் தலைமையில் விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையங்களிலிருந்து 14 வீரர்கள் கொண்ட தீயணைப்புப் படையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 2 அரவை இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.