சிறுத்தையின் கால் தடத்தினை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

0பார்த்தது
சிறுத்தையின் கால் தடத்தினை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே சகாதேவன் பேட்டையில் வீட்டின் அருகே சிறுத்தையை பார்த்ததாக முன்னாள் வனத்துறை ஊழியர் சிவராஜ் விழுப்புரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, இரவு நேரங்களில் கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தினர். சாலையம் பாளையத்தில் அழகு பாண்டியன் என்பவருக்கு சொந்தமான சவுக்கை தோப்பு பகுதியில் சிறுத்தையின் கால்தடத்தை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். சிறுத்தையின் கால் தடம் என்பதை உறுதி செய்ய பிளாஸ்டர் ஆப் பாரி சாந்து மூலம் அச்சு எடுத்து வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுத்தையின் கால் தடம் தெரியவந்துள்ளது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி