விழுப்புரம் தனியார் திருமணமண்டபத்தில் "என் ஊர் என் கனவு" திட்டத்தின் கீழ் 2030க்கான தொலைநோக்கு திட்ட கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, இந்தி திணிப்பை கடுமையாகக் கண்டித்தார். 1965ல் நடந்த சம்பவங்களை நினைவூட்டி, பாஜக அரசின் ரயில்வே பல்போர்டுகள், கல்விக்கொள்கை, சமஸ்கிருத ஊக்குவிப்பு ஆகியவற்றை இந்தி திணிப்பின் எடுத்துக்காட்டுகளாகக் கூறினார். அண்ணாவின் இருமொழிக் கொள்கையை மீறி மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்கிறார்கள் என விமர்சித்த அவர், தமிழக முதலமைச்சர் அதைத் தடுப்பார் என்றும், "இந்திக்கு வெறுப்பில்லை, திணிப்புக்கு எதிர்ப்பு" என்பதே தங்கள் கொள்கை என்றும் தெரிவித்தார்.