விழுப்புரத்தில் நடைபெற்ற 72வது கூட்டுறவு வார விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் பல்வேறு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகளும், சிறந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும், மக்களிடத்தில் நல்ல தொடர்பு பேணிவருவதாகவும் தெரிவித்தார். மேலும், 2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும், ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.