வளவனுார் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

50பார்த்தது
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார், நேற்று(அக்.13) குமளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு கடை வீதியில் வாதானுாரைச் சேர்ந்த ராஜவேலு, (39)என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அங்கு, விற்பனைக்காக குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. உடன், ராஜவேலு மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.