வானூர் தாலுகா ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் கடந்த மார்ச் 10 மற்றும் மே 1, 2023 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. இதையடுத்து, இவ்வழக்குகளின் விசாரணையை மார்ச் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.