புதுச்சேரி மாநிலம், பிள்ளைச் சாவடி திருக்குளம் தெருவைச் சேர்ந்த மு.பூரணி (45) என்பவர், வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது மொபெட்டில் குயிலாப்பாளையத்திலிருந்து ஆரோவில் அருகிலுள்ள பொம்மையார்பாளையம் நோக்கிச் சென்றுள்ளார். குயிலாப்பாளையம் பகுதியிலுள்ள உணவகம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த தலைக்கவசம் அணிந்த நபர், பூரணி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து பூரணி அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸார், குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.