விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூர் பகுதியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், 3ஆம் கால யாக பூஜைகள், பூர்ணாஹூதி ஆகியவற்றைத் தொடர்ந்து, புனித நீர் கலசங்கள் கோபுரத்தின் மீது ஏற்றி, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், புனித நீர் கலந்த பக்தர்களுக்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.