விழுப்புரம் அருகே சாலையாம்பாளையம் மற்றும் சகாதேவன்பேட்டை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வனத்துறையினர் 12 பேருடன் முகாமிட்டு, 3 இடங்களில் ஆடுகள் வைக்கப்பட்ட கூண்டுகளைக் கொண்டு 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுவரை சிறுத்தையின் கால்தடம் அல்லது உறுதியான ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை. பொதுமக்கள் அச்சமின்றி இருக்கவும், வெளியே செல்லும்போது கவனமாக இருக்கவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போது இரவு நேரங்களில் மட்டும் கூண்டுகளில் ஆடுகளை வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் பகல் நேரங்களில் ஆடுகளை கூண்டில் இருந்து வனத்துறையினர் கொண்டு செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.