விழுப்புரத்தில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

82பார்த்தது
விழுப்புரம் எஸ். பி. சரவணன் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது, புதுவை மாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள், விழுப்புரம் ஜி. ஆர். பி தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் சந்துரு (28), கணேசன் மகன் சரவணன் (45) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். பைக்கில் கடத்திவரப்பட்ட 90 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 180 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி