விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

77பார்த்தது
விழுப்புரம் ஜி. ஆர். பி. தெரு பகுதியில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ஒரு செல்போன் மற்றும் ரூ. 2,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான இவர் மீது, விக்கிரவாண்டி, விழுப்புரம் நகரம், மேற்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி