விழுப்புரம் ரயில் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது

2பார்த்தது
விழுப்புரம் ரயில் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது
விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் கஞ்சா விற்பனைக்காக கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ரயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர்கள் லியோ சார்லஸ் மற்றும் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காதர் உசேன் (24) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காதர் உசேன் விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர். அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி