விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி சீருடை அணிந்த இரு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை சோதனை செய்ததில், புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்ட 316 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விழுப்புரம் நந்தனார் தெருவைச் சேர்ந்த பரத் என்கிற பர்வீன் (30) என்பவரிடம் இருந்து இந்த மதுபானங்கள் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. இவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.