விழுப்புரம் அருகே சிறுவந்தாடு மதுவிலக்கு சோதனைச் சாவடியில், புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தி வந்த மணிகண்டன் (38) என்பவர் கைது செய்யப்பட்டார். மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையின்போது இவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 140 மி.லி கொண்ட 140 மதுபாட்டில்கள் மற்றும் 1000 மி.லி கொண்ட 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிகண்டன் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.