விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன் மகன் ஜெகன், (33); விழுப்புரம் அடுத்த நன்னாட்டாம்பளையத்தைச் சேர்ந்தவர் மணி மகன் பச்சையப்பன், (23); இருவருக்குமிடையே சில நாட்களுக்கு முன்பு, மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
கடந்த 13ம் தேதி, கலிஞ்சிக்குப்பம் தபால் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த பச்சையப்பன் மற்றும் அவரது உறவினர் அஜித், (26); ஆகியோரை மறித்து தகராறு செய்த ஜெகன், இருவரையும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து புகாரின் பேரில், ஜெகன் மீது வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.