மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் விஜயை விமர்சித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்வலைகள் அடங்கும் முன்பே மரக்காணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு தான் அரணாக இருப்பேன் என முதல்வர் கூறிய வீரவசனம் என்ன ஆனது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.