விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் பட்டப்பகலில் நகை வியாபாரியிடம் 2.40 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து தங்கக் கட்டிகளை நகைகளாகச் செய்து கொண்டு சென்ற நகை தொழிலாளி ராஜமாணிக்கத்தை, முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளைப் பறித்துச் சென்றது. இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத் நேரில் ஆய்வு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.