விழுப்புரத்தில் டோக்கன் வழங்கும் பணியை தொடங்கிவைத்த அமைச்சர்

70பார்த்தது
விழுப்புரம் மாவட்டத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு, நேற்று காலை விழுப்புரம் அய்யனார் கோவில் தெரு ரேஷன் கடை மற்றும் பூந்தோட்டம் ரங்கநாதன் தெரு ரேஷன் கடை பகுதியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். இதில் எம். எல். ஏ. , லட்சுமணன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் விஜயசக்தி, விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, முன்னாள் சேர்மன் ஜனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.